- நெல்லை மாவட்ட சிலம்பாட்ட போட்டி சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்
- உற்சாகமாய் கலந்துகொண்ட போட்டியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது
சிலம்பம் எனும் அழகிய கலைநயமிக்க வீர விளையாட்டு மற்றும் தமிழர் தற்காப்புக் கலையை நாம் பார்க்கும்போது நமக்குள் வீரமும் , மகிழ்ச்சியும் நிச்சயம் ஏற்படும் என்பதில் மனம் உவகை பெரும் என்பது மறுக்க முடியாத உண்மை. இவ்விளையாட்டைக் கம்பு சுற்றுதல் என்றும் கூறுவர்.
தடியைக் கையாளும் முறை, கால் அசைவுகள், உடல் அசைவுகள் மூலம் தம்மைப் பாதுகாத்து கொள்ளுதல் என சொல்லப்படும் சிலம்பாட்டம் என்பது நம்முடைய இந்தியர்களுக்கே உரிய தனிக்கலை என்பதால் அடிக்கடி அதை நினைவுபடுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் , போட்டிகள் என அரசு சிலம்பாட்ட வல்லுனர்களுக்கு உற்சாகம் கொடுத்து வருகின்றது.
சிலம்பாட்டத்தினை சிறப்பு ஊட்டும் வகையில்.. நெல்லை மாவட்டம் பணகுடியில் சிலம்பாட்ட போட்டி நடைபெற்றது. மாவட்ட அளவிலான தனித்திறமை மற்றும் குழு போட்டிகள் கொண்ட சிலம்பம் விளையாட்டுப் போட்டியை , உலக சிலம்பம் விளையாட்டு சங்கம் நடத்த , சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்.
இதில் பல்வேறு மாவட்ட போட்டியாளர்கள் பங்குபெற்றனர். , வெற்றி பெற்றவர்களுக்கு ஊக்கம் தரும் வகையில் பரிசுகள் வழங்கப்பட்டன.
சங்க நிறுவன தலைவர் டாக்டர் சுதாகரன் தலைமை தாங்க...
விழாவில் தென் மண்டல பொறுப்பாளர் கார்த்திக் ,மாநில மகளிர் அணி தலைவர் டாக்டர் கீதா, திமுக மாநில வர்த்தகர் அணி இணைச் செயலாளர் கிரகாம்பெல், மாவட்ட கைப்பந்து கழக துணைத்தலைவர் ஆர் எம் எஸ் தாமஸ் டேனியல் ,திமுக நகர செயலாளர் தமிழ்வாணன் , தேசிய செயலாளர் மாநில தொழில் நுட்ப இயக்குனர் வீரவேல், பேரூராட்சித் துணைத் தலைவர் சகாய புஷ்பராஜ் உட்பட பலர் கலந்த கொண்ட இவ்விழா மிக இனிதே நடைபெற்றது.
சிலம்பம் எனும் நம் இந்தியர்க்குறிய பெருமை மிக்க கலைதனை வெளிக்கொணர்ந்து , பல மாவட்ட பங்களிப்பாளர் கலந்துகொண்டு சிறப்பாய் நடந்த நிகழ்ச்சிகள் கண்டு திருநெல்வேலி டுடே மகிழ்ச்சி தெரிவிக்கின்றது.
Image source: Dailythanthi.com