- சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி.
- மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி ஊர்வலம்.
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பேரணியும், கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வள்ளியூர் காவல்துறை கண்காணிப்பாளர் திரு.பர்னபாஸ் மற்றும் காவல்துறை ஆய்வாளர் திரு.சாகுல் ஹமீது ஆகியோர் கலந்து கொண்டு சாலை விழிப்புணர்வு பேரணியை கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.
இந்த பேரணியில் மாணவ - மாணவிகள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த பதாகைகள் ஏந்தியும், துண்டு பிரசுரங்கள் வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Image source: maalaimalar.com