தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தருவை மைதானத்தில் நடைபெற உள்ள குடியரசு தின விழா குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கோபி, மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் அமுதா, உதவி கலெக்டர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதில் விழா நடைபெறும் மைதானத்தில் சிறிய சின்டெக்ஸ் தொட்டிகள் மூலம் குடிநீர் வசதிகள் ஏற்படுத்துதல், மைதானத்தை தூய்மைப்படுத்தல், அவசர காலத்தில் பயன்படுத்துவதற்கு தேவையான தீ தடுப்பு கருவிகள் அமைத்தல், தீயணைப்பு வாகனம் மற்றும் பணியாளர்களை தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்.
பொது சுகாதாரத்துறையின் மூலம் முதலுதவி சிகிச்சை அளிக்க மருத்துவ குழு மற்றும் 108 ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைத்தல், கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கையாக நிகழ்ச்சியில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்தல், சானிடைசர் மற்றும் முககவசம் வழங்குதல், காவல்துறை மூலம் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்துதல் ஆகியன குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.