- மாநகராட்சியில் நடைபெற்ற மண்டல தலைவர்கள் தேர்வு.
- போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள்.
திருநெல்வேலி மாநகராட்சியில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் மூலம் 55 வார்டுகளுக்கும் கவுன்சிலர்களும் மற்றும் மேயர், துணை மேயர் ஆகியோரும் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் வைத்து, திருநெல்வேலி மாநகராட்சியில் உள்ள திருநெல்வேலி, பாளையங்கோட்டை, மேலப்பாளையம் மற்றும் தச்சநல்லூர் ஆகிய 4 மண்டலங்களுக்கு உரிய தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதில் திருநெல்வேலி மண்டல தலைவராக மகேஸ்வரி அவர்களும், தச்சநல்லூர் மண்டல தலைவராக ரேவதி அவர்களும், பாளையங்கோட்டை மண்டல தலைவராக பிரான்சிஸ் அவர்களும், மேலப்பாளையம் மண்டல தலைவராக கதிஜா இக்லாம் பாசிலா அவர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Image source: maalaimalar.com