பாளையங்கோட்டை அழகிய மன்னார் ராஜகோபாலசாமி கோவிலில் இன்று தை ரத சப்தமி விழா சிறப்பாக நடைபெற உள்ளது. இதனையொட்டி இன்று காலை 6.00 மணிக்கு ராஜகோபாலன் - சூரியபிரபை வாகனத்திலும், காலை 8.30 மணிக்கு ராஜகோபாலன் - கருட வாகனத்திலும், மாலை 4.00 மணிக்கு ராஜகோபாலன் - ஆதிசேஷ வாகனத்திலும், அழகிய மன்னார் - இந்திரா விமானத்திலும், மாலை 5.30 மணிக்கு ராஜகோபாலன் - அனுமந்த வாகனத்திலும், அழகிய மன்னார் - அன்ன வாகனத்திலும், இரவு 9.00 மணிக்கு ராஜகோபாலன் - சந்திர பிரபை வாகனத்திலும் எழுந்தருளி நான்கு மாட வீதிகள் மற்றும் நான்கு தேர் வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சித்தர இருக்கிறார்கள்.