கோவில் திருவிழா என்றால் கோவிலை சுற்றி இருக்கும் பகுதி வட்டார மக்களுக்கு ஒரே கொண்டாட்டம். தம்முடைய உறவுமுறைகளை , நண்பர்களை வீட்டிற்கு அழைத்து சொந்த பந்தங்களோடு கோவிலுக்கு சென்று தெய்வத்தை தரிசித்து , விருந்து என மகிழ்வோடு கொண்டாடுவதில் என்றும் ஆனந்தம் உண்டு. அதுவும் இந்த மாதத்தில் வரக்கூடிய ஆனித் திருவிழா நெல்லை மாவட்ட மக்களுக்கு பக்தி பரவசம் தரக்கூடிய மிகச்சிறந்த விழாவாக அமைந்துள்ளது.
திருநெல்வேலி அடுத்த ராஜவல்லி புரத்தில் அருள்மிகு செப்பர் அழகிய கூத்தர் கோவிலில், ஆனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
மிகவும் சிறப்பான இத்திருக்கோவிலில் வருடந்தோறும் ஆனி திருவிழா விமரிசையாக நடைபெறும் . இந்த ஆண்டும் அதுபோலவே ஞாயிற்றுக்கிழமை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு அபிஷேகம் மகா தீபாராதனை நடைபெற ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதில் தாழையூத்து சங்கர் நகர் ராஜவள்ளிபுரம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்ற இத்திருவிழாவில் நாள்தோறும் காலையில் மாலையும் சிறப்பு வழிபாடு, சுவாமி வீதி உலா நடைபெறுகிறது.
நடைபெறும் நிகழ்ச்சிகள்..
ஜூலை 2 ஆம் இரவு 7 மணிக்கு அழகிய கூத்தருக்கு சிவப்பு சாத்தி வழிபாடு.
3 ஆம் தேதி மாலை 5 மணிக்கு பச்சை சாத்தி சிறப்பு வழிபாடுகள்
4 ஆம் தேதி பகல் 12 30 மணிக்கு தேரோட்டம்
5 ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு மகா அபிஷேகம் மற்றும் பிற்பகல் ஒரு மணிக்கு நடன தீபாராதனை,
இரவு 8 மணிக்கு அலங்கார தீபாராதனை அழகிய கூத்தர் தாமிரசபை எழுந்தருளல் நிகழ்வு நடைபெற இருக்கிறது. ஏற்பாடுகள் சிறப்பாக கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்