Logo of Tirunelveli Today

புதிதாகக் கட்டப்பட்ட மின்னணு இயந்திரங்கள் பாதுகாப்பு மையத்துக்குக் கொண்டுவரப்பட்ட தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள்.!

May 4, 2021
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

திருநெல்வேலி சட்டமன்ற தொகுதிக்கு நடைபெற்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை கடந்த மே மாதம் 2 ஆம் தேதி  முடிவடைந்த நிலையில் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பு மையத்துக்குக் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டத்தைப் பொறுத்தவரை 5 தொகுதிகளில் தேர்தலுக்காக 1924 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த வாக்குச் சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு இயந்திரங்கள் அனைத்தும் திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் வைத்துப் பாதுகாக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் அங்கு வைத்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகளும் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் தற்போது மின்னணு இயந்திரங்கள் அனைத்தும் அரசு பொறியியல் கல்லூரியிலிருந்து, எடுத்து வரப்பட்டு திருநெல்வேலி டவுன் தாசில்தார் அலுவலக வளாகத்துக்குள் புதிதாகக் கட்டப்பட்ட இந்திய தேர்தல் ஆணையத்தின் மின்னணு இயந்திரங்கள் பாதுகாப்பு மையத்துக்கு வந்து சேர்க்கப்பட்டது. இந்தப் பணிகளை மாவட்ட கலெக்டர் விஷ்ணு மற்றும் தேர்தல் ஆணைய அலுவலர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify