- திருநெல்வேலி மாநகராட்சியில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்.
- புதிதாக பதவியேற்ற மேயரிடம் பொதுமக்கள் நேரில் மனு.
திருநெல்வேலி மாநகராட்சியில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் மேயர் - பொதுமக்கள் சந்திக்கும் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வந்தது. கடந்த 5 ஆண்டுகளாக திருநெல்வேலி மாநகராட்சியில் மேயர் இல்லாததாலும், கொரோனா ஊரடங்கு காரணங்களாலும் இந்த கூட்டம் முறையாக நடைபெறவில்லை.
இந்நிலையில் தற்போது திருநெல்வேலி மாநகராட்சி புதிய மேயராக திரு. சரவணன் பதவியேற்றுள்ளதை தொடர்ந்து, நேற்று முதல் மீண்டும் செவ்வாய்க்கிழமை பொதுமக்களிடம் கோரிக்கை மனு வாங்கும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கைகள் அடங்கிய மனுவை மேயரிடம் நேரில் வழங்கினார்கள்.
இதில் குடிதண்ணீர் பிரச்சினை, குடிநீர் குழாய் உடைப்பு பிரச்சினை, சாக்கடை, கழிப்பறை, தெருவிளக்கு, சாலை வசதி உள்ளிட்ட பிரச்சினைகளை மையப்படுத்தி நிறைய மனுக்கள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Image source: dailythanthi.com