செய்திக்குறிப்புகள்:
- நெல்லை நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தலைமையில் கிராமங்களை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது.
- கிராமத்தை தூய்மையாக வைத்திருக்க ஒத்துழைப்பு தருவோம் என மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியாளர் விஷ்ணு தலைமையில் கிராமங்களை தூய்மைப்படுத்தும் பணி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கிராமத்தை தூய்மையாக வைத்திருக்க ஒத்துழைப்பு தருவோம் என மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அருகே ரெட்டியார்பட்டி பஞ்சாயத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் நெல்லை நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் கீழ் கிராமங்களை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியாளர் தலைமை தாங்கி விழிப்புணர்வு பேரணியும் தொடங்கி வைத்தார் .
அப்பொழுது அவர் தெரிவித்ததாவது;
நம்ம ஒரு சூப்பர் என்ற திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களையும் தூய்மையாக்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
சுதந்திர தினத்தன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது . இந்த திட்டத்தின் மூலம் நடைபெறக்கூடிய செயலாக்கங்கள் குப்பைகளை தரம் பிரித்து சேகரிப்பது, வீட்டில் உள்ள கழிவு நீரை வீட்டு தோட்டத்தில் பயன்படுத்துவது இல்லை என்றால் வீட்டில் உறிஞ்சு குழி அமைத்து கழிவு நீரை வெளியேற்றுவது, பொது இடங்களில் குப்பைகளை கொட்டுவதை நிறுத்த வேண்டும் என்பது குறித்த மக்களிடம் ஒரு விழிப்புணர்வு பெறவேண்டும்.
கிராமத்தை சேர்ந்த அனைவரும் தூய்மையாக வைத்திருக்க ஒத்துழைப்பு தர வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் பேசினார். விழாவில் பங்கேற்ற அனைவரும் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் தூய்மையாக வைத்திருப்போம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் கனகராஜ் , பாளையங்கோட்டை யூனியன் தலைவர் கே .எஸ். தங்கபாண்டியன், துணைத் தலைவர் முரளிதரன் , வளர்ச்சி அலுவலர் பாலசுப்ரமணியன் , ரெட்டியார்பட்டி பஞ்சாயத்து தலைவர் சந்திரசேகர் மற்றும் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
Image source: dailydhanthi.com