- மார்ச்-27 ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்.
- 9.00 மணி முதல் 2.00 மணி வரை நடைபெற உள்ளது.
திருநெல்வேலி மாவட்டம்., வள்ளியூர் பெட் பாலிடெக்னிக் கல்லூரியில் வரும் 27/03/2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதில் பங்கேற்க விருப்பம் உள்ள 5ம் வகுப்பு - 12ம் வகுப்பு, ஜ. டி. ஜ, டிப்ளமோ, பட்டப்படிப்பு மற்றும் கணினி பயிற்சி கல்வி ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவர்கள் தங்கள் பயோடேட்டா, கல்வி சான்றிதழ், அடையாள அட்டை ஆகியவற்றின் நகலுடன் நேரில் வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த பல்வேறு தகவல்களை NELLAI EMPLOYMENT OFFICE என்ற டெலிகிராம் சேனலில் இணைவதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
Image source: patrika.com