அனைத்து சிவாலயங்களிலும் மிகவும் சிறப்பாக பிரதோஷம் வழிபாடு கொண்டாடப்படுகிறது.
சிவனும் பார்வதியும் ஒன்றாக இணைந்து ஆடுகின்ற நடன காட்யை நாம் கண்டு பேரானந்தம் கொள்ளும் திருநாள் பிரதோஷம். சிவனுக்காக வேண்டுகின்ற ஒரு தினம் தான் பிரதோஷம் மாலை 4 மணிக்கு மேல் 6 மணிக்குள் பிரதோஷ நேரம்.
அந்த நேரத்தில் சிவனுக்கு நடைபெறும் பூஜையை கண்ணால் தரிசிப்பது மிகவும் சிறப்பு.மனதில் ஒரு காரியத்தை நினைத்து விரதம் இருந்தால் காரியம் ஜெயமாகும் .
சிவனுடைய எதிரே இருக்கும் நந்தியின் காதில் நம்முடைய வேண்டுதலை சொன்னால் நந்தி பகவான் சிவபெருமானிடத்தில் சொல்ல நம்முடைய வேண்டுதல் உடனே பலிக்கும் .
108 முறை ஓம் சிவாய நமஹ எனும் சிவாய மந்திரத்தை மனதில் நிறுத்தி சொல்லுதல் பலன் தரும்.
இதனால் ஏற்படும் தெய்வீக பலன் தம்பதியரின் மனதில் இருக்கும் வீண் குழப்பங்கள் தீரும் .ஒற்றுமையோடு இருப்பர். மனச்சுமைகள் விலகும். வாழ்க்கையில் தம்பதியர் ஒற்றுமையோடு வாழ்வதற்கு பிரதோஷ வழிபாடு நிச்சயம் பலனளிக்கும்.
பிரதோஷம் அன்று நாம் சிவபெருமானை வணங்கி வழிபட்டால் உடலில் இருக்கும் பிணி நீங்கி ஆரோக்கியம் கிடைக்கும். சுபிட்சம் உண்டாகும். தொழில் விருத்தி, குழந்தை பேறு ,செல்வம் சேர்க்கை என நாம் நினைக்கும் அனைத்தும் ஜெயமாகும். பிரதோஷம்தோறும் கோவிலுக்கு சென்று சிவபெருமானின் வணங்கி வரவும்.
பிரிந்த தம்பதியர் பிரதோஷம் அன்று வில்வ இலை அர்ச்சனைக்கு கொடுத்து வரவும். தொடர்ந்து 5 பிரதோஷங்கள் 2 நெய் அகல் தீபம் ஏற்றி வர ..கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும் .
ஓம் நமசிவாய என்னும் மந்திரத்தை 108முறை சொல்லி, வில்வ தழை சிவபெருமானுக்கு அர்ச்சனைக்கு கொடுத்து சிவனை வேண்டி அன்றைய தினத்தில் விரதம் இருந்தால், பாவங்கள் அனைத்தும் விலகி புண்ணியங்கள் அனைத்தும் பெற்று வாழ்க்கையில் அனைத்து வளங்களும் பெறுவோம். எதிர்மறை சக்திகள் மறைந்து நேர்மறை சக்திகள் நமக்குள் கிடைத்து வாழ்க்கையில் அனைத்து செல்வங்களையும் நாம் பெற்று பிறந்த வாழ்வின் பயனை நிறைவு செய்வோம்.
Image source: dinakaran.com