மாசி மாத வளர்பிறையுடன் கூடிய சோமவார பிரதோஷ தினமான நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனை முன்னிட்டு நேற்று மாலை 4.00 மணிக்கு திருக்கோவில் நடைகள் திறக்கப்பட்டு, மாலை 4.30 மணிக்கு மேல் நந்தியெம்பெருமானுக்கும், கருவறை மூலவருக்கும் வகை திரவியங்களால் சிறப்பு அபிஷேங்கங்கள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து நந்திக்கு சிறப்பு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்குபெற்று சுவாமி தரிசனம் செய்தனர்.