திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகா தேவி பொழிக்கரை சுடலை ஆண்டவர் கோவில் கொடை விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை தரிசனம் செய்தனர் .
.
சேரன்மகாதேவி பொழிக்கரை தாமிரபரணி நதிக்கரை ஓரம் அமைந்துள்ள மிகவும் புகழ்பெற்ற ஆலயமான சுடலை ஆண்டவர் திருக்கோவில் அமைந்துள்ளது.
ஹரிஹர புத்திர இந்திர அய்யனார் சாஸ்தா ,பேச்சியம்மன், முண்ட சாமி, மாசானமுத்து , கட்டை ஏறும் பெருமாள், சிவனைந்த பெருமாள் மற்றும் இசக்கி அம்மன் சன்னதி என தெய்வங்கள் அருள் பாவிக்கின்றனர் .
இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை ஆடி மாதம் மூன்றாவது செவ்வாய்க்கிழமை அன்று கொடை விழா என்பது மிகவும் கோலாக்கலமாய் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டும் மிகவும் விமர்சையாக கொடைதிருவிழா கொண்டாடப்பட்டது.
நேற்று காலை அம்மன் வழிபாடு, உச்சிக்கால பூஜை , பூக்குழி இறங்குதல் அன்னதான நிகழ்ச்சி , சிறப்பு புஷ்ப அலங்காரம் , தீபாராதனை நடைபெற்றது.
நையாண்டி மேளம், கெண்டை மேளம் வில்லிசை மற்றும் மகுட நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
புண்ணியம் பெருகும் ஆடிப்பெருக்கு விழா
வாழ்வில் இன்பம் பெருகி, நிறைந்த செல்வம் பெருகி, மன நிம்மதி மகிழ்ச்சி பெருகி, நல்லென அனைத்தும் அனைவருக்கும் நடக்க இனிய ஆடிப்பெருக்கு வாழ்த்துக்கள்.
காவேரி தாயை வரவேற்கும் விழாஆடிப்பெருக்கு விழா. நம் தமிழ் நாட்டுக்கு பெருமை சேர்க்கும் பெருவிழா. தமிழ் மாதமான ஆடி 18ம் நாள் பெருக்கெடுத்து வரும் காவிரித் தாயை மலர்தூவி வரவேற்கும் மலர் விழா. உள்ளத்துக்கும் உடலுக்கும் உவகை அளிக்கும் இனிய விழா ஆடிப்பெருக்கு திருவிழா.
நீர் பெருக்கெடுத்து ஓடும் நதிக்கரைகளில் பதினெட்டுப் படிகளை அமைத்த நமது முன்னோர்கள காவிரி அன்னைக்கு, ஆடிப் பதினெட்டு அன்று நன்றி செலுத்தும் விதமாக விழா கொண்டாடினார்கள்.
அந்த பண்பாட்டினை தொடரும் விதமாக இன்றும் மன மகிழ்வோடு காவிரி அன்னையை நினைத்து , அனைத்து நீர் நிலைகளையும் தெய்வமாக வழிபட்டு வணங்கி வருகின்றோம் என்பது நம் கலாச்சாரத்திற்கு உரிய சிறப்பு.
பதினெட்டு என்ற எண் வெற்றியைக் குறிக்கும். மகாபாரதத்தில் 18 பர்வங்கள், பகவத்கீதையில் 18 அத்தியாயங்கள், சபரிமலையில் 18 படிகள் , கோவிலின் புனித படிகளும் 18 என சாஸ்திரங்கள் கூறும் வெற்றி எண்ணில் கொண்டாடப்படும் ஆடி 18 நாம் செய்ய வேண்டியது என்ன!
தாலி பாக்கியம் நிலைக்க சுமங்கலி பெண்கள் ஆடிப்பெருக்கு அன்று புது தாலிமாற்றிக்கொள்வர்.இந்த நன்னாளில் புதுமண பெண்ணிற்கு தாலி பிரித்து கோர்ப்பர் . சிலருக்கு அந்த பழக்கம் இல்லை என்றாலும் குடும்பத்தோடு சென்று நீர் நிலைகளை கண்டு வணங்கி வழிபடுதல் சிறப்பு.
எந்த ஒரு நல்ல காரியங்களை ஆடிப்பெருக்கு அன்று ஆரம்பித்தால் , அந்த காரியம் மேலும் மேலும் பெருகும் என்பது ஐதீகம்.
மேலும் செல்வ கடாட்சம் பெருகும் ஆரோக்கியம் கூடும் . தோஷங்கள் அனைத்தும் விலகி வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.
.
அங்குமிங்கும் அலைபாய்ந்து திரண்டு வரும் வரும் நதிகளாய்.. அமைந்தது நம்முடைய வாழ்க்கை. அப்படி இருந்தும் நதிகள் ஆனந்தத்தோடு ஓடிவருவது எதற்காக! பெரும் கடலில் சேர்வதற்கு வழிப்பாதை கிடைத்த மகிழ்ச்சியா!
அதுபோல நீங்கள் செல்லக்கூடிய தெளிவான பாதை கிடைத்து ஆனந்த வாழ்க்கையை பெற வேண்டும். முடிவிலே ஆன்மீகம் எனும் பெருங்கடலை அடைந்து புனித வாழ்வுதனை பெற வேண்டும் என்பதற்குரிய சிறப்பான வழிபாடு தான் ஆடிப்பெருக்கு என்பதை மனமார்ந்து உணருங்கள்.
நதிகள், ஆறு, கடல் என அருகில் எது இருக்கின்றதோ அங்கே குடும்பத்தோடு சென்று உங்களுடைய குலதெய்வத்தை நினைத்து ஆத்மார்த்தமாய் இந்த ஆடிப்பெருக்கில் நீர்நிலையை கண்ணால் கண்டு , புண்ணியம் பெற்று வணங்கி வழிபட்டு வாழ்வினில் பிறந்த பயனில் இனிது காண்போம்.
Image source: dailythanthi.com