தென்காசி மாவட்டத்தில் உள்ள கீழப்பாவூர் மற்றும் அச்சன்புதூர் துணைமின் நிலையங்களில் வரும் 22/01/2022 அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அன்று காலை 9.00 மணி முதல் 2.00 மதியம் மணி வரை மேற்கண்ட துணைமின் நிலையங்களில் இருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளில் மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கீழப்பாவூர் துணைமின்நிலையம் மூலம் மின்தடை ஏற்படும் பகுதிகள்:
கீழப்பாவூர், பாவூர்ச்சத்திரம், மேலப்பாவூர், குறும்பலாப்பேரி, நாட்டார்பட்டி, ஆவுடையானூர், வெய்க்காலிப்பட்டி, சின்னநாடானூர், திப்பணம்பட்டி, செட்டியூர், பெத்தநாடார்பட்டி, சிவகாமிபுரம், மகிழ்வண்ணநாதபுரம், அடைக்கலப்பட்டினம், சாலைப்புதூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.
அச்சன்புதூர் துணைமின்நிலையம் மூலம் மின்தடை ஏற்படும் பகுதிகள்:
அச்சன்புதூர், வடகரை, நெடுவயல், வாவாநகரம், காசிதர்மம், பண்பொழி மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.