- கொக்கிரக்குளம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி.
- மாநகர பகுதிகளில் இன்று 9.00 - 5.00 மின் தடை.
திருநெல்வேலி மாநகரில் உள்ள கொக்கிரக்குளம் துணை மின் நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், கீழ்காணும் இடங்களில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின் தடை செய்யப்படும் என நெல்லை நகர்ப்புற மின்விநியோக செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
இன்று மின் தடை ஏற்படும் பகுதிகள்:
நெல்லை சந்திப்பு பகுதி, கொக்கிரகுளம், மீனாட்சிபுரம், வடக்கு புறவழிச்சாலை, தெற்கு புறவழிச்சாலை, வண்ணார்பேட்டை, சாலைத்தெரு, இளங்கோ நகர், பரணி நகர், நெல்லை சந்திப்பு முதல் மேரி சார்ஜென்ட் பள்ளி வரையிலான திருவனந்தபுரம் சாலை, பாளை புதுப்பேட்டை தெரு, சுப்பிரமணியபுரம் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
Image source: Facebook.com