- நெல்லை பாளையங்கோட்டை தபால் ஊழியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- உயிரிழந்த ஊழியர்கள் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
நெல்லை மாவட்டம் தபால் துறை என்பது தனியார் மயமாக்கப்படக்கூடாது. புதிய பென்ஷன் திட்டத்தை மாற்றி பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் அமுல்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகள் முன்வைத்து போராட்டம் நடைபெற்றது.
3, 4, 5 தேதிகளில் தபால்துறை ஊழியர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கருப்பு பேட்ச் அணிந்து வேலை செய்தனர் . இந்த தபால் ஊழியர்கள் நாடு முழுவதும் இன்று ஒரு நாளை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர் .
.தபால் ஊழியர்களுக்கு வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை நாட்களாக மாற்ற வேண்டும். கொரோனா தொற்றால் உயிரிழந்த ஊழியர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் இந்தப் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
நெல்லை மாவட்டத்தில் ஊழியர்கள் ஒரு நாள் போராட்டத்தில் கலந்து கொண்டனர். கோட்ட செயலாளர்இள் அருண்குமார், சுப்பிரமணியன், தங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர் .
Image source: maalaimalar.com