- திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம்.
- மாவட்டத்தில் 135174 குழந்தைகளுக்கு போலியோ மருந்து செலுத்தப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் நேற்று பல்வேறு இடங்களில் போலியோ தடுப்பு முகாம் நடைபெற்றது. இதில் ஐந்து வயதிற்கு உட்பட்ட 135174 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாவட்டத்தில் உள்ள நகரங்களின் முக்கிய இடங்களான பேருந்து நிலையம், ரயில் நிலையம், அரசு மருத்துவமனை மற்றும் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள் ஆகியவற்றிலும், ஊராட்சி, பஞ்சாயத்து பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றிலும் என பல்வேறு இடங்களிலும் போலியோ தடுப்பு முகாம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.