விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் வரும் 19/02/2022 அன்று உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர்கள் தேர்தலில் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் அந்தந்த பகுதிகளில் காவல்துறையினர் மூலம் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று சாத்தூர் நகராட்சி பகுதிகளில் நடைபெற்ற இந்த அணிவகுப்பை விருதுநகர் கூடுதல் காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரு.குத்தாலிங்கம் அவர்கள் தலைமை தாங்கி துவக்கி வைக்க, பேண்டு வாத்தியங்கள் முழங்க காவலர்கள் ஊர்வலமாக பேருந்து நிலையம், தாலுகா அலுவலகம், முக்குராந்தல், வடக்கு ரத வீதி, பள்ளிவாசல் வீதி, வெள்ளைக்கரை ரோடு, அண்ணாநகர், புறவழிச்சாலை வழியாக சென்று காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தை அடைந்தவுடன் அணிவகுப்பு நிறைவடைந்தது. அதுபோல ராஜபாளையம் நகராட்சி பகுதிகளில் நடைபெற்ற இந்த அணிவகுப்பை ராஜபாளையம் கூடுதல் காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரு.ராமகிருஷ்ணன் அவர்கள் தலைமை தாங்கி துவங்கி வைக்க, நேரு சிலையில் இருந்து காவலர்கள் ஊர்வலமாக பழைய பேருந்து நிலையம், காந்தி சிலை, ரவுண்டானா, வழியாக சென்று பெரிய மாரியம்மன் கோவில் திடலில் நிறைவடைந்தது.