தமிழகம் முழுவதும் வரும் 19/02/2022 ஆம் தேதி அன்று உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, பொதுமக்கள் அச்சமின்றியும், அமைதியான முறையிலும் வாக்களிப்பதை உறுதி செய்யும் பொருட்டு மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும் காவலர்களின் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று திருநெல்வேலி மாநகர காவல்துறை சார்பில், பாளையங்கோட்டை தினசரி சந்தை பகுதியில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இந்த கொடி அணிவகுப்பில் திருநெல்வேலி மாநகர கிழக்கு துணை காவல் ஆணையாளர் திரு.சுரேஷ்குமார், கூடுதல் துணை காவல் ஆணையாளர் திரு.ஞானசேகரன், உதவி காவல் ஆணையாளர்கள் திரு.பாலச்சந்திரன் (பாளையங்கோட்டை), திரு.பாலமுருகன் (மேலப்பாளையம்), காவல்துறை ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.