செய்தி குறிப்புகள் :
- நெல்லை போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் சாலை ஆக்கிரமிப்புகள் மற்றும் பேனர்களை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
- வண்ணாரப்பேட்டையில் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று சாலையோர ஆக்ரமிப்புகள் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டன.
நெல்லை மாநகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக ஆக்கிரமிப்புகள் மற்றும் டிஜிட்டல்பேனர்கள் வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படும் நிலை இருந்து வந்தது. பல உயிர்களும் பலியாகும் நிலையும் இதனால் ஏற்படுகின்றது. இதை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் கூறிவந்தனர் .
இதனை ஏற்று மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி நெல்லை வண்ணார்பேட்டை , மேம்பாலம் ரவுண்டானா பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு உத்தரவிட்டார் .
இதையடுத்து மாநகராட்சி உதவி ஆணையாளர் லெனின் , உதவிப் பொறியாளர் சிவசுப்பிரமணியன், மாநகராட்சி செயற்பொறியாளர்கள் நாராயணன், சுகாதார அலுவலர் இளங்கோ, நெடுஞ்சாலைத் துறை ஊழியர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகளை மேற்கொண்டனர்.
நேற்று காலையில் நெல்லை வண்ணாரப்பேட்டை ரவுண்டானா பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினார்கள். மேலும்
கடைகளில் முன்புள்ள மேற்கூரைகள் விளம்பர பலகைகள் போன்றவற்றையும் கடைகளின் முன்புள்ள கான்கிரீட் ஸ்லாப்புகள் போன்றவற்றையும் அகற்றினர்
சாலையோரம் தள்ளுவண்டிகளில் செயல்பட்ட கடைகளையும் , அங்கிருந்த மேஜை நாற்காலி என வாகனங்களில் ஏற்றியதால் சில வியாபாரிகள் எதிர்ப்பு qதெரிவித்து நெடுஞ்சாலைத்துறை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் . சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. எனினும் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து அகற்றப்பட்டது.