செய்திக் குறிப்புகள்
- நெல்லை மாவட்டம் சேரன்மாதேவியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பற்றிய பேரணி கூட்டம் நடந்தது
- உதவி கலெக்டர் அலுவலகம் மற்றும் கோபாலசமுத்திரம் கிராம உதயம் இணைந்து பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்
நாளைய நாட்டின் நிலை பசுமை சூழும் விதமாக , சுற்றுச்சூழல் சுகாதார பாதிப்பு ஏற்படாமல் நடந்து கொள்ளும் விழிப்புணர்வு மக்களிடையே இருந்தால் நம் வருங்கால சந்ததிகள் நலம் பெறுவர் இதை கருத்தில் கொள்ளும் விதமாக..
நெல்லை மாவட்டம் சேரன்மாதேவியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பற்றிய மாபெரும் பேரணி கூட்டம் நடந்தது. உதவி கலெக்டர் அலுவலகம் மற்றும் கோபாலசமுத்திரம் கிராம உதயம் இணைந்து பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்
உதவி கலெக்டர் ரிஷாத் சேரன்மாதேவி பஸ் நிலையம் முதல் காந்தி பூங்கா வரை நடந்த பேரணியை தொடங்கி வைத்தார்.
மரக்கன்றுகள் வழங்குதல் நடும் முறை மற்றும் பராமரிக்கும் முறை , மஞ்சள் துணிப்பை வழங்குதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. ஆட்டோ மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
உதவி கலெக்டர் தலைமை தாங்கி மரக்கன்றுகளை வழங்க, கிராம உதயம் நிர்வாக இயக்குனர் டாக்டர் சுந்தரேசன் முன்னிலை வகித்தார் . ஆலோசனைக் குழு உறுப்பினர் புகழேந்தி பகத்சிங் வரவேற்க , நிர்வாக மேலாளர் மகேஸ்வரி , பகுதி பொறுப்பாளர் சசிகலா சேகர் , ஆறுமுக தாய் ஆகியோர் மரக்கன்றுகளின் அவசியம் குறித்து விளக்கி கூறினர்.
தனி அலுவலர் ரேவதி குமாரி நன்றி கூற, நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் மஞ்சள் துணிப்பை மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டு வந்த விழிப்புணர்வு பேரணி இனிதே நடைபெற்றது.
Image source: Dailythanthi.com