- நெல்லையில் தனியார் வேலை வாய்ப்பு மையம் முகாம் நடக்க இருக்கின்றது.
- 6-8-2022 சனிக்கிழமை அன்று நடைபெறும் இந்த முகாமில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பங்கேற்று பயன் பெறுவார்கள்.
திருநெல்வேலி மாவட்டம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு அறிவித்துள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது;
நெல்லையில் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 6-8-2022 சனிக்கிழமை அன்று நடைபெற இருக்கின்றது.
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இதன் மூலம் பயன் பெறுவார்கள் . காலை 9 மணிக்கு தொடங்கி பிற்பகல் 2 மணி வரை முகாம் நடைபெற இருக்கிறது. இந்த முகாமில் 200க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்க இருக்கின்றன.
ஐந்தாம் வகுப்பு முதல் எஸ் எல். சி, பிளஸ் 2 ,பட்டப்படிப்பு ,டிப்ளமோ ,ஐடிஐ மற்றும் கணினி பயிற்சி கல்வி தகுதி உடைய அனைவரும் இந்த முகாமில் பங்கேற்கலாம். இதில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகள் உடைய இளம் பெண்கள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொள்ளலாம். சுயதொழில் செய்வதற்கு தேவையான கடன் உதவிகள் அனைத்தும் வழங்கும் நிறுவனங்களும் பங்கேற்க இருக்கின்றன.
இந்த முகாமில் பங்கேற்க விரும்புபவர்கள் தங்களுடைய கல்விச்சான்று, ஆதார் அட்டை, ஆகியவற்றின் நகலுடன் சுய விவரங்களையும் சேர்த்து கொண்டு வர வேண்டும்.
மேலும் www.tnprivatejobs.tn.gov.in. என்ற இணையதளத்தில், கலந்து கொள்ள விரும்புபவர்கள் தங்களுடைய விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம். வேலை வாய்ப்பு தொடர்புக்கு , மேலும் தகவல்கள் பெறுவதற்கு NELLAI EMPLOYMENT OFFICE என்ற டெலிகிராம் சேனலில் இணைந்தும் பயனடையவும் என்று மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.
Image source: thehindu.com