செய்திக்குறிப்புகள்:
மாவட்ட நிர்வாகம் சார்பில் புகைப்பட போட்டி அறிவிப்பு.
விருப்பம் உள்ளவர்கள் பங்குபெற ஆட்சியர் அழைப்பு.
திருநெல்வேலியில் மாவட்ட நிர்வாகம் சார்பாக நடைபெற உள்ள "பொருநை - நெல்லை புத்தகத் திருவிழா 2022" நிகழ்வை முன்னிட்டு புகைப்பட போட்டிகள் நடத்தப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. விஷ்ணு அவர்கள் தெரிவித்துள்ளார்.
"நெல்லையின் சுவைகள்" மற்றும் "நெல்லையின் மனிதர்கள்" ஆகிய இரண்டு தலைப்புகளில் நடைபெறும் புகைப்பட போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் மேற்கண்ட தலைப்புகளை மையமாக வைத்து புகைப்படங்களை எடுத்து வரும் 12/03/2022 தேதிக்குள் nellaibookfairphoto@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும், சிறந்த புகைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட உள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.