- நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது
- நெல்லை மாவட்ட மக்களின் கோரிக்கைகளை ஏற்று அதற்கான உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவு.
திருநெல்வேலி மாவட்டம் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ் குமார் தலைமை ஏற்க , மாநில துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன் (கிழக்கு) அனிதா, தலைமையிடம் சரவணகுமார் (மேற்கு ) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மோசடி , பொதுமக்கள் நில அபகரிப்பு, மேலும் மக்களின் அனைத்து குறைகள் போன்ற 16 மனுக்களை கூட்டத்தில் பங்கேற்ற மக்கள் வழங்கினார்கள்.
அவை அனைத்தையும் பெற்றுக் கொண்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் குறைகளுக்கு சம்பந்தப்பட்ட இடங்களில் விசாரித்து அதற்கான உரிய நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என்றனர்.
இது போலவே பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமை தாங்கினார். மக்கள் தங்களது பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை சரவணனிடம் கொடுக்க, அதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் சரவணன் உத்தரவிட்டார்.
Image source: dailythanthi.com