- பெருநை நெல்லை புத்தக திருவிழா - 2022 துவங்கியது.
- முதல் நாளிலேயே 6 லட்சத்திற்கு புத்தகங்கள் விற்பனை.
திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் சார்பாக, பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் நேற்று முன்தினம் பொருநை நெல்லை புத்தகத் திருவிழா - 2022 துவங்கி உள்ளது.
இந்த புத்தகக் கண்காட்சியில் கடந்த இரண்டு நாட்களில் ஏராளமான பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு கண்காட்சியை பார்வையிட்ட நிலையில், முதல் நாளிலேயே 6 லட்ச ரூபாய்க்கு புத்தகங்கள் விற்பனையாகி உள்ளதாகவும், அதில் வரலாற்று ரீதியான புத்தகங்களை அதிகளவில் வாசகர்கள் விரும்பி வாங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் மற்றும் பொது மக்களின் வரவேற்புக்கு மத்தியில் வரும் 27/03/2022 ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த புத்தகக் கண்காட்சியில் தினமும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதும், புத்தகங்கள் அனைத்தும் 10% தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Image source: Facebook.com