செய்திக் குறிப்புகள்
- நெல்லை மாவட்ட கடற்கரைகளில் தீவிரவாதிகள் ஊடுருவல் தடுப்பு பற்றி ஒத்திகை நடத்தப்பட்டது.
- புதன்கிழமை மீண்டும் கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் இந்த ஒத்திகை நடைபெறும் என்றும் போலீசார் அறிவிப்பு
நாட்டை அழிக்கும் தீவிரவாதம் பல இடங்களில் நடப்பதும் , முழுமூச்சாய் செயல்பட்டு நம் நாட்டு இந்திய படையினர் அதை முறியடிப்பதும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. தீவிரவாதிகள் ஊடுருவலை தடுப்பதற்கான முன்னேற்பாடான நடவடிக்கைகள் அரசு எடுத்து வருகிறது. அதை செயல்படுத்தும் விதமாக….
திருநெல்வேலி தமிழக கடலோரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை அன்று தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் வகையில் 'சாகர் ஹவாச்' எனும் ஒத்திகையை கடலோர பாதுகாப்பு காவல் படையினர் நடத்தினர்.
ஆண்டுதோறும் 2 முறை தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் ஒத்திகை பயிற்சி தமிழக கடற்கரை பகுதியில் நடத்தப்படுகின்றது
திருநெல்வேலியில் பாதுகாப்பு படை ஆய்வாளர் நவீன் தலைமையில் இந்த ஒத்திகை நடைபெற்றது . உதவி ஆய்வாளர் வில்சன் மற்றும் காவல்துறையினர் மாவட்ட கடலோர பகுதிகளில் ஒத்திகையில் ஈடுபட்டனர்.
நான்கு தீவிரவாதிகள் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பின்பகுதியில் நுழைவது போலவும், கடலோர பாதுகாப்பு குழுமத்தை சேர்ந்த காவலர்கள் தீவிரவாதிகளை கைது செய்வது போலவும் ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது .
மேலும் அடையாள அட்டை வாகன உரிமங்கள் அணுமின் நிலையத்தில் வேலை செய்பவர்களிடம் பரிசோதனை செய்யப்பட்டது புதன்கிழமை மீண்டும் கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் இந்த ஒத்திகை நடைபெறும் என்றும் போலீசார் அறிவித்தனர்
Image source: Digital Goa