திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவில் மற்றும் நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவில்களில் தை அமாவாசையை ஒட்டி நேற்று பத்ர தீப விழா விமரிசையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு நேற்று பகலில் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்று, மாலையில் திருக்கோவில் வளாகம் முழுவதும் பத்தாயிரம் தீபங்கள் ஏற்றப்பட்டு ஜொலித்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீபங்கள் ஏற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.