திருநெல்வேலி இட்ட மொழி பரப்பாடி உலகளந்த பெருமாள் முத்தாரம்மன் திருக்கோவில் கொடை விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது .
திருநெல்வேலியில் இட்ட மொழி பரப்பாடு உலகளந்த பெருமாள் முத்தாரம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த திரு கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.
பலவிதமான தெய்வீக திருவிழாக்கள், விசேஷ பூஜைகள் என அனைத்து சிறப்பான பூஜைகளும் நடைபெற்ற வண்ணம் இருக்கும்.
இந்த வருடம் பரப்பாடி உலகளந்த பெருமாள் முத்தாரம்மன் கோவிலில் திருக்கொடை விழா மிகவும் சிறப்பாக நேற்று நடைபெற்றது.
விழாவையொட்டி கும்பாபிஷேகம், திருவிளக்கு பூஜை உச்சி கால பூஜை, அன்னதானம் புஷ்பாஞ்சலி, மஞ்சள் பெட்டி எடுத்தல், முளைப்பாரி ஊர்வலம் , அம்மன் வீதி உலா, மகேஸ்வர பூஜை, மஞ்சள் பானை வைத்தல், மகுட ஆட்டம், பொங்கல் பானை வைத்தல் , அலங்கார பூஜை இன்னிசை கச்சேரி , பட்டிமன்றம் என விசேஷ நிகழ்ச்சிகள் அனைத்தும் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இதற்கான விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள ஏற்பாடு செய்திருந்தனர்.
Image source: dailythanthi.com