- தென்பாண்டி நாட்டில் அமையப்பெற்றுள்ள பஞ்சபூத ஸ்தலங்கள்.
- சங்கரன்கோவில் தொடங்கி தேவதானம் வரை ஒரே நாளில் தரிசிப்பது சிறப்பு.
தென்பாண்டி நாடு என்று சிறப்பித்து அழைக்கப்படும் திருநெல்வேலிச் சீமையில் எண்ணற்ற சிவாலயங்கள் அமையப்பெற்றுள்ளன. அவற்றுள் பஞ்சபூதங்களான நிலம், நெருப்பு, நீர், காற்று, ஆகாயம் ஆகியவற்றின் தத்துவத்தில் அமையப்பெற்றுள்ள கோவில்கள் தென்பாண்டி நாட்டின் பஞ்சபூத ஸ்தலங்கள் என்று சிறப்பிக்கப்படுகின்றன.
பஞ்ச பூத தலங்கள்:
1. நிலம்: சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மை உடனுறை ஸ்ரீ சங்கரநயினார் திருக்கோவில்.
2. நெருப்பு: கரிவலம்வந்தநல்லூர் ஸ்ரீ ஒப்பனையம்மை உடனுறை ஸ்ரீ பால்வண்ணநாதர் திருக்கோவில்.
3. நீர்: தாருகாபுரம் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்மை உடனுறை ஸ்ரீ பிணக்கறுத்த பெருவுடையார் திருக்கோவில்.
4. காற்று: தென்மலை ஸ்ரீ சிவபரிபூரணாம்பிகை உடனுறை ஸ்ரீ திரிபுரநாதர் திருக்கோவில்.
5. ஆகாயம்: தேவதானம் ஸ்ரீ தவம்பெற்றநாயகி உடனுறை ஸ்ரீ நச்சாடைத்தவிர்த்தநாதர் திருக்கோவில்.
Image source: Facebook.com