- திருச்செந்தூர் பங்குனி உத்திர திருவிழா.
- வள்ளி அம்மை - குமரவிடங்கர் திருக்கல்யாணம்.
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் இன்று பங்குனி உத்திரத்தை முன்னிட்டு வள்ளியம்மை - குமரவிடங்கர் திருக்கல்யாண விழா நடைபெற உள்ளது.
இந்த விழாவை முன்னிட்டு இன்று காலை வள்ளியம்மை தவக்கோலம் பூண்டு, மண்டகப்படி எழுந்தருளி தபசிருக்க, மாலை குமரவிடங்கர் மயில் வாகனத்தில் எழுந்தருளி வள்ளியம்மைக்கு காட்சியளிக்க, மாலை மாற்றும் வைபவம் நடைபெறுகிறது.
தொடர்ந்து இரவில் திருக்கோவில் பிரகாரத்தில் வைத்து வள்ளியம்மை - குமரவிடங்கர் திருக்கல்யாண விழா கோலாகலமாக நடைபெறுகிறது.
இந்த விழாவில் பங்குபெற்று திருக்கல்யாணத்தை தரிசித்தால் திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்.
Image source: Facebook.com