- பங்குனி உத்திரம் செங்கோல் வழங்கும் விழா.
- நெல்லையப்பர் கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் நாளை நடைபெற உள்ளது.
திருநெல்வேலி மாநகரில் உள்ள பிரசித்தி பெற்ற காந்திமதி அம்மை உடனுறை சுவாமி நெல்லையப்பர் திருக்கோவிலில் நாள் பங்குனி உத்திர செங்கோல் வழங்கும் விழா நடைபெற உள்ளது. முற்காலத்தில் இந்த பகுதியை ஆட்சி செய்த பாண்டிய மன்னனுக்கு, சுவாமி நெல்லையப்பர் செங்கோல் வழங்கிய நிகழ்வை அடிப்படையாக கொண்டு வருடம் தோறும் இந்த விழா விமரிசையாக நடைபெற்று வருவது சிறப்பம்சம் ஆகும்.
நாளை இரவு 7.00 மணிக்கு மேல் சுவாமி நெல்லையப்பர் - காந்திமதி அம்மை திருக்கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளியிருக்க, அங்கு வைத்து செங்கோல் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் திருக்கோவில் நிர்வாக அதிகாரிகள் செங்கோல் மற்றும் சுவாமி திருப்பாதங்களை பெற்று, அதனை சுமந்தபடி கோவிலுக்குள் உள்ள பிரகாரங்களில் மேளம், தாளம், நாதஸ்வரம் முழங்க உள்ள வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Image source: Facebook.com