- ராஜகோபாலசுவாமி கோவில் பங்குனி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
- புதிதாக செய்யப்பட்ட தேரில் ராஜகோபாலன் உலா வர இருக்கிறார்.
பாளையங்கோட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற அழகியமன்னார் இராஜகோபாலசுவாமி திருக்கோவிலின் பங்குனி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்க இருக்கிறது. இந்த விழாவில் பத்தாம் நாளான 19/03/2022 அன்று புதிதாக தயார் செய்யப்பட்டு வெள்ளோட்டம் கண்ட தேரில், இராஜகோபாலன் ரத வீதிகளில் உலா வர உள்ளார்.
பங்குனி திருவிழா நிகழ்ச்சிகள்:
10/03/2022 முதலாம் நாள்:
காலை: கொடியேற்றம்.
இரவு: இரட்டை தோளுக்கினியான்களில் இராஜகோபாலன், அழகியமன்னார் வீதி உலா.
11/03/2022 இரண்டாம் திருநாள்:
காலை: பல்லக்கில் இராஜகோபாலன் வீதி உலா.
இரவு: சிம்ம வாகனத்தில் இராஜகோபாலன் வீதி உலா.
12/03/2022 மூன்றாம் திருநாள்:
காலை: பல்லக்கில் இராஜகோபாலன் வீதி உலா.
இரவு: அனுமந்த வாகனத்தில் இராஜகோபாலன் வீதி உலா.
13/03/2022 நான்காம் திருநாள்:
காலை: பல்லக்கில் இராஜகோபாலன் வீதி உலா.
இரவு: ஆதிசேஷன் வாகனத்தில் இராஜகோபாலன் வீதி உலா.
14/03/2022 ஐந்தாம் திருநாள்:
காலை: பல்லக்கில் இராஜகோபாலன் வீதி உலா.
இரவு: இரட்டை கருடசேவை. இராஜகோபாலன், அழகியமன்னார் தனித்தனி கருட வாகனங்களில் வீதி உலா.
15/03/2022 ஆறாம் திருநாள்:
காலை: பல்லக்கில் இராஜகோபாலன் வீதி உலா.
இரவு: யானை வாகனத்தில் இராஜகோபாலன் வீதி உலா.
16/03/2022 ஏழாம் திருநாள்:
காலை: பல்லக்கில் இராஜகோபாலன் வீதி உலா.
மாலை: சூர்ணோத்ஸவம் முடிந்து இந்திர விமானத்தில் இராஜகோபாலன்
வீதி உலா.
இரவு: புன்னைமர வாகனத்தில் இராஜகோபாலன் வீதி உலா.
17/03/2022 எட்டாம் திருநாள்:
காலை: பல்லக்கில் இராஜகோபாலன் வீதி உலா.
இரவு: குதிரை வாகனத்தில் இராஜகோபாலன் வீதி உலா.
18/03/2022 ஒன்பதாம் திருநாள்:
காலை: சூரியபிரபையில் இராஜகோபாலன் வீதி உலா.
இரவு: சந்திரபிரபையில் இராஜகோபாலன் வீதி உலா.
19/03/2022 பத்தாம் திருநாள்:
காலை: தேரோட்டம்.
இரவு: பல்லக்கில் தவழ்ந்த கண்ணன் திருக்கோலத்தில் வீதி உலா.
20/03/2022 பதினோறாம் திருநாள்:
காலை: தாமிரபரணியில் தீர்த்தவாரி.
இரவு: சப்தாவர்ண புறப்பாடு.
Image source: anudhinam.org