- நவதிருப்பதி ஸ்தலங்களில் ஒன்றாக விளங்கும் திருப்புளிங்குடி.
- பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்.
தாமிரபரணி ஆற்றங்கரையில் அமையப்பெற்றுள்ள நவதிருப்பதி கோவில்களுள் ஒன்றாக விளங்கும் திருப்புளிங்குடி பூமிபாலகர் பெருமாள் திருக்கோவிலில் பங்குனி திருவிழா நேற்று (25/03/2022) காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதனையொட்டி நேற்று அதிகாலை 4.00 மணிக்கு கோவில் நடைகள் திறக்கப்பட்டு, அதிகாலை 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், தொடர்ந்து காலை 5.00 மணிக்கு சிறப்பு திருமஞ்சனமும் நடைபெற்றது.
தொடர்ந்து காலை 6.45 மணிக்கு மேல் கொடிப்பட்டம் மாட வீதிகளில் உலா சென்று வர, காலை 7.30 மணிக்கு மேல் கொடிமரத்தில் திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. பின்னர் இரவு 7.00 மணிக்கு மேல் உற்சவர் காய்சினிவேந்த பெருமாள் தோளுக்கினியானில் எழுந்தருளி வீதிகளில் உலா வந்தார்.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை சேவித்தனர்.
Image source: Facebook.com