செய்தி சுருக்கம் :
- நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் அரசு அருங்காட்சியகத்தில் தேசிய புத்தக கண்காட்சி விழா நடைபெறவிருக்கிறது.
- காப்பாட்சியர் சிவசத்திய வள்ளி அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இம்மாதம் 18ஆம் தேதி கண்காட்சி தொடக்கம் என்று அறிவிப்பு.
நம்முடைய வாழ்வில் படிப்படியாக முன்னேறுவதற்கு புத்தகம் ஒரு பாலமாய் அமைகிறது. நம் லட்சியம் வெற்றி பெற அதற்கு ஏற்றவாறு பலருடைய புத்தகம் கருத்துக்கள் அனைத்தும் திரட்டவும், அதற்கான குறிப்புகள் எடுத்து வைக்கவும், அதில் பல கேள்விகள் எழுப்பி, விடை காண்பதற்கும் புத்தக கண்காட்சி நமக்கு உறுதுணையாக அமையும். அதை பறைசாற்றும் வகையில்
பாளையங்கோட்டையில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் இம்மாதம் 18ஆம் தேதி முதல் தேசிய புத்தக கண்காட்சி நடைபெறுகிறது
இதுகுறித்து காப்பாட்சியர் சிவசத்திய வள்ளி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாவது...
நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் அரசு அருங்காட்சியகம் ஆகியவை சேர்ந்து 35-வது தேசிய புத்தக கண்காட்சி விழா நடத்த இருக்கிறது. அருங்காட்சியக வளாகத்தில் நடக்கும் இந்த கண்காட்சி இம்மாதம் 18ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை தினமும் காலை 10மணி முதல் இரவு 7 மணி வரை
நடக்கும்.
இதுதவிர இம்மாதம் 18ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை தினமும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு உற்சாக போட்டிகளும் கவியரங்கம் , கருத்தரங்கும் நடைபெறும் இந்த போட்டிகளில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ்களும், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படும் ..
சிறப்பு தள்ளுபடியாக 10 முதல் 15 சதவீதம் வரை பள்ளி கல்லூரி நூலகங்களுக்கு வாங்கும் நூல்களுக்கு வழங்கப்பட உள்ளது
மேலும்விபரங்களுக்கு 75 0 2 433751 இந்த எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள் என்று அறிவிப்பில்குறிப்பிடப்பட்டுள்ளது
சமையலில் தோசையோடு சுவை தரும் சட்னி இட்டு பரிமாறிய அந்தக் கால புத்தகங்கள் மட்டுமில்லாது… அதே தோசையில் பீட்சா , பனீர், காளான், சீஸ், சாஸ் என கலந்து விதவிதமாய் பரிமாறுவது போல இந்த கால தேவையான புத்தகங்களும் ஒருசேர பார்க்கக்கூடிய புத்தக கண்காட்சியை அனைவரும் சென்று பார்த்து பயன் பெறுவோம்.