செய்தி குறிப்புகள் :
- பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் தேசிய புத்தக விழா தொடங்கியது
- கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் மகாதேவன் எழுதியுள்ள 'திருநெல்வேலி நினைவுகள்' என்னும் நூலை கல்லூரி முதல்வர் வெளியிட்டார்.
புத்தகம் படிக்கும் ஆர்வம் அனைவருக்கும் வரவேண்டும். நற் கருத்துமிக்க நூலாக , அனைவருக்கும் ஒரு ஊன்றுகோலாக, ஒரு படிப்பினையாக, படிப்பவரின் வாழ்க்கையில் , வெற்றிப் படிகளில் ஏறுகின்ற ஒரு ஏணியாக திகழ்வதற்கு ஏற்ற புத்தகத்தை தேர்வு செய்து , படித்து வாழ்க்கையில் வெற்றி பெறுக என்று திருநெல்வேலி டுடே வாழ்த்து தெரிவிக்க…பாளையங்கோட்டையில் நடந்த புத்தகத் திருவிழா கண்ணோட்டத்தைப் பார்ப்போம்.
பாளையங்கோட்டையில் சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் தேசிய புத்தக விழா தொடங்கியது.
தில்லி நேஷனல் புக் டிரஸ்ட் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம், பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி நூலகம் ஆகியவை இணைந்து 2 நாட்கள் நடக்கும் இந்த புத்தக திருவிழாவை ஏற்பாடு செய்தது.
கல்லூரி முதல்வர் சே. மு அப்துல் காதர் தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.
முன்னாள் அறிவியல் பல முதன்மையர் கமாலுதீன் முன்னிலை வகித்தார் கல்லூரி நூலகர் சரவண குமார் வரவேற்றார் துணை முதல்வர் செய்யது முஹமது காஜா , கலைப்புல முதன்மையர் எஸ் முகம்மது ஹினிப் மற்றும் அறிவியல் புல முதன்மையர் முகமது ரோஷன் ஆகியோர் வாழ்த்துரை பேசினர்
கல்லூரி முதல்வர் , தமிழ்த்துறை தலைவர் மகாதேவன் எழுதியுள்ள 'திருநெல்வேலி நினைவுகள்' என்னும் நூலை வெளியிட.. கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர் எல் கே எம் ஏ முகம்மது நவாப் புத்தகத்தை பெற்றுக்கொண்டார்.
கல்லூரி நூலக அலுவலர் பஷீர் அகமது நன்றி கூற , 100 ரூபாய்க்கு மேல் நூல்கள் வாங்கும் மாணவ மாணவியருக்கு தினமும் குலுக்கல் முறையில் புத்தக பரிசுகள் வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.