திருநெல்வேலி பாளையங்கோட்டை ராஜகோபால சுவாமி கோவில் சுபிட்ச வருஷாபிஷேக விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. அதில் பெருமாளின் வாகனமாய் அருள் தரக்கூடிய கருட பகவானின் கருட சேவை விழா நிகழ்ச்சி நடைபெற்றது
கருட சேவையையொட்டி கோவிலில் அதிகாலை 6.30 மணிக்கு முதல் சிறப்பு யாகம் கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு ஹோமம் , திருமஞ்சனம் ராஜகோபுரம் சுவாமி தாயார் மற்றும் விமான கலசங்களுக்கு புனித ஊர் நீர் ஊற்றுதல், அபிஷேகம், ஆராதனை நிகழ்ச்சிகள் நடைபெற்றன
தொடர்ந்து ஏழு மணிக்கு ராஜகோபாலசுவாமி மற்றும் அழகிய மன்னார் இரட்டை கருட சேவை நிகழ்ச்சியும் நடைபெற ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து சுவாமியை தரிசனம் செய்தனர்.
அடுத்து ஸ்ரீதேவி தாயார் அன்ன வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா செல்ல.. அதையடுத்து பூதேவி தாயார் கெஜலட்சுமி வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். கிருஷ்ணன் தோளுக் கினியான் வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா செல்ல அளவிலா பக்தர்கள் ஆனந்த கரகோஷம் செய்தனர்.
தானத்தில் சிறந்தது அன்னதானம் அன்னதானம் செய்வோர் ஏழு பிறப்பிலும் எவ்வித துன்பமும் இன்றி இனிதாக வாழ்வார் என்பது சான்றோர் வாக்கு.
வருஷாபிஷேக விழா நடைபெறும் இந்த ராஜகோபால சுவாமி திருக்கோவிலிலும் பக்தர்களுக்கு மிகச் சிறப்பான முறையில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதே போல புகழ்பெற்ற நெல்லை கருப்பன் துறை தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள சிவகாமசுந்தரி அம்பாள் சமேத ஈஸ்வரர் அழியாபதீஸ்வர் திருக்கோவில் அமைந்துள்ளது . இந்த கோவிலிலும் வருஷாபிஷேகம் மிகச் சிறப்பாக அதே தினத்தில் நடைபெற்றது.