திருநெல்வேலி மாநகரில் கொரோனா நோய் பரவல் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஹைகிரவுண்ட் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் நோயாளிகள் சிரமமின்றி சிகிச்சை பெறுவதற்கு வசதியாக, ஹைகிரவுண்ட் அரசு மருத்துவமனை எதிரே உள்ள காந்திமதி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கோவிட் பரிசோதனை மையம் மற்றும் சிகிச்சை மையம் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட ஆட்சியர் திரு.விஷ்ணு அவர்கள் ஆய்வு செய்து நேற்று துவக்கி வைத்தார். இங்கு கொரோனா பாதிப்புகளுக்கு உள்ளான நோயாளிகள் சிகிச்சை பெற்றுக் கொள்ளும் வகையில் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய இரண்டு படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. இதன்மூலம் ஹைகிரவுண்ட் அரசு மருத்துவமனையில் ஏற்படும் இடநெருக்கடி கட்டுப்படுத்தப்படும். இனி கொரோனா நோய்த் தொற்று உள்ளவர்கள் இங்கு தான் நேரடியாக கொண்டு வரப்பட்டு பரிசோதனை செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.