செய்தி சுருக்கம் :
- நெல்லை களக்குடியில் தனுவாஸ் ஊட்டச்சத்து அறிமுக விழா
- தனுவாஸ் ஊட்டச்சத்து தொழில்நுட்பங்களை பால்பண்ணை யாளர்களிடம் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆரோக்கியமாய் வாழ்வதற்கு தினமும் 100 மில்லி பால் எடுத்துக்கொள்ளவேண்டும் என்று ஆய்வு கூறுகின்றது . பால் உற்பத்தியை பெருக்குவதற்கு அரசு பலவிதமான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன் நடவடிக்கையாக..
நெல்லை மாவட்டம் கலக்குடியில் செவ்வாய்க்கிழமை அன்று கறவை மாடுகளில் பால் உற்பத்தியை அதிகரிக்கும் தனுவாஸ் ஊட்டச்சத்து தொழில்நுட்பங்களை பால்பண்ணை யாளர்களிடம் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சிநடைபெற்றது .
சிற்றாறு நிலப் பகுதியைச் சேர்ந்த 86 கால்நடை விவசாயிகள் பங்கேற்றனர். இவ்விழாவில் , மாவட்டத் துணைத் திட்ட ஒருங்கிணைப்பாளர் கால்நடை ஊட்டச்சத்து துறை உதவி பேராசிரியர் அருள்நாதன் வரவேற்றார். மாநிலத் துணைத் திட்ட ஒருங்கிணைப்பாளர் முருகேஸ்வரி தனுவாஸ் கிராண்ட் ஊட்டச்சத்து குறித்து விளக்கி பேசினார்.
கால்நடை ஊட்டச்சத்துயியல் துறை செல்லபாண்டியன் கால்நடை வளர்ப்போருக்கு கிடைக்கும் சேவை பற்றி விரிவுரையாற்ற…கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் கு .கலையரசி கால்நடை பராமரிப்புத் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் சிறப்புரையாற்றினார்
தமிழ்நாடு நீர்வள இரண்டாம் பகுதியின் சிற்றாறு உப வடிநிலப்பகுதி திட்ட பயனாளிகளுக்கான ' கறவை மாடுகளின் பால் உற்பத்தியை அதிகரிக்கும் மற்றும் மீத்தேன் உற்பத்தியை குறைக்கும் தனுவாஸ் ஊட்டச்சத்து தொழில்நுட்பங்களை பண்ணையாளர்களிடம் பிரபலப்படுத்தும் முயற்சியாக இவ்விழா நடைபெற்றது.
கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் வி.பி பொன்னுவேல் திட்டத்தில் மடிப்பிதழ்களை வழங்கினார். கல்லூரி முதல்வர் அ.பழனிசாமி பயனாளிகளுக்கு இடு பொருட்களை வழங்கி தலைமை உரையாற்றினார்.