ஆனித் தேரோட்டம் முன்னேற்பாடு பணிகள் ஆலோசனை கூட்டம் கலெக்டர் விஷ்ணு தலைமையில் நடந்தது கண்காணிப்பு கோபுரங்கள் மற்றும் கேமராக்கள் அமைக்க காவல்துறையினருக்கு அறிவுறுத்தல் நெல்லையில் கலெக்டர் விஷ்ணு தலைமையில் நெல்லையப்பர் கோவில் ஆனி தேரோட்டம் தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. மாநகராட்சி ஆணையாளர் சிவ கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். வருகிற 3ஆம் தேதி கொடியேற்றத்துடன் அம்பாள் கோவில் திருவிழா தொடங்குகிறது. 11 ஆம் தேதி திங்கட்கிழமை தேரோட்டம் நடைபெற உள்ளது. அதற்கான வசதிகள் […]
செய்திக் குறிப்புகள் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் நேரடி மேற்பார்வையில் யோகா தின விழா கொண்டாட்டம் அருங்காட்சியகத்தில் யோகா தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தபட்டன. பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் நேரடி மேற்பார்வையில் போலீசார் நேற்று யோகாசனம் செய்தனர். அப்போது அவர்களுக்கு யோகா பயிற்சிகள் குறித்த விளக்கங்கள் அளிக்கப்பட்டது . மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு தலைமையில் ,நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில், நீதிபதிகள் , வக்கீல்கள் நீதிமன்ற அலுவலர்கள் […]
செய்திக் குறிப்புகள் ஆயிரக்கணக்கான மாணவ மாணவியர் கலந்துகொண்ட சர்வதேச யோகா தினம் கொண்டாட்டம். பாளையங்கோட்டை வ உ சி மைதானத்தில் சர்வதேச யோகா தினம் நேற்று கொண்டாடப்பட்டது. அன்னையர் தினம், தந்தையர் தினம் , மகளிர் தினம், காதலர் தினம் என பல்வேறு தினங்கள் , நம் பாரம்பரிய வேரின் மணம் மறக்கக்கூடாது என்பதற்காக கொண்டாடப்பட்டாலும் உடலுக்கும் மனதுக்கும் திறன் அளிக்கக்கூடிய சர்வதேச யோகா தினம் என்பது நம்முடைய உடல், மன ஆரோக்கியத்திற்காக கொண்டாடப்படுகின்ற சிறப்பு தினம். […]
செய்திக் குறிப்புகள் திருநெல்வேலி வள்ளியூரில் 12.13 கோடி மதிப்பீட்டில் புதிய பஸ் நிலையம் கட்ட ஏற்பாடு. புதிய பஸ் நிலையத்திற்கு சபாநாயகர் அப்பாவு அடிக்கல் நாட்டி துவக்கி வைப்பு நெல்லை மாவட்டம் அரசு கவனம் ஏற்று பல்வேறு துறைகளில் முன்னேற்றம் கண்டு வருகிறது. அப்படி வளர்ந்து வரும் ஊர்களில் வள்ளியூர் நகர பஞ்சாயத்தும் ஒன்று. கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 12.13 கோடி வள்ளியூர் பஸ் நிலையத்தை நவீன மயமாக்க புதிய கட்டிடம் கட்டுவதற்கு […]
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் தொழுநோய் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. ஸ்காட் கல்வியியல் கல்லூரியில் நடைபெற்ற தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு முகாமில் கல்லூரி முதல்வர் பியூலா தலைமை தாங்கி நடத்தி வைத்தார். தொழுநோய் என்பது புறநரம்புகள் பகுதிகளிலும் மற்றும் சுவாசக்குழாயில் காணப்படும் கோழையில் ஏற்படும் குருமணி என்று சொல்லப்படும் நோய்களாகும். ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை அளிக்காமல் விட்டுவிட்டால் தொழுநோயின் தீவிரம் அதிகரித்து தோல், நரம்பு, விரல்கள் பாதிப்பு மட்டுமன்றி கண்களுக்கு நிரந்தர பாதிப்பை ஏற்படுத்தும். இதற்கான மக்களுக்கு விழிப்புணர்வு […]
செய்திக் குறிப்புகள் நெல்லை மாவட்டம் சேரன்மாதேவியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பற்றிய பேரணி கூட்டம் நடந்தது உதவி கலெக்டர் அலுவலகம் மற்றும் கோபாலசமுத்திரம் கிராம உதயம் இணைந்து பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தினர் நாளைய நாட்டின் நிலை பசுமை சூழும் விதமாக , சுற்றுச்சூழல் சுகாதார பாதிப்பு ஏற்படாமல் நடந்து கொள்ளும் விழிப்புணர்வு மக்களிடையே இருந்தால் நம் வருங்கால சந்ததிகள் நலம் பெறுவர் இதை கருத்தில் கொள்ளும் விதமாக.. நெல்லை மாவட்டம் சேரன்மாதேவியில் பிளாஸ்டிக் ஒழிப்பு […]
நெல்லை பாபநாசம் மேற்குதொடர்ச்சி மலையில் கல்யாண தீர்த்தம் கோடி லிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் மிக சிறப்பாக நடைபெற்றது . இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேற்குதொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற அகஸ்தியர் அருவிக்கு மேல் இருக்கும் கல்யாண தீர்த்தத்தில் லோக நாயகி சமேத கோடி லிங்கேஸ்வரர் கோவில் அமைந்து உள்ளது . நினைத்த காரியங்கள் நிறைவேற அருள் புரியும் அகஸ்தியர் அவரது மனைவி லோப முத்திரையுடன் ரதத்தில் நின்ற நிலையில் சிலை […]
25- 6- 2022 - சனிக்கிழமை கிருத்திகை விரதம் கிருத்திகை நாள் அன்று கந்த சஷ்டி கவசம் படியுங்கள். எந்த பிணியையும் துயரத்தையும் போக்கக்கூடிய பதிகம். தலை முதல் பாதம் வரை ஒவ்வொரு உறுப்பையும் நலம் காக்க வேண்டி முருகப்பெருமானின் வேல் காக்க என தியானித்து பாடும் அற்புதமான பாடல் அன்றைய தினம் பாடி வாழ்க்கையில் வளம் பெருக. சுபீட்சம் அனைத்தும் நீர் பெருக. 26-6-2022 - ஞாயிற்றுக்கிழமை பிரதோஷம் ஓம் சிவாய நமஹ எனும் திருநாமத்தை […]
பல சங்கடங்கள் வரும் பொழுது தீர்வு பெற வேண்டி தெய்வத்தை நாடுகின்றோம். சங்கடங்கள் பல உண்டு துயரங்கள் மலையுண்டு- துன்பமும் நிறைய உண்டு. நிவர்த்திக்காக மனமும் தெய்வத்தை நாடுவதும் உண்டு. நம்பினோர் கைவிடப்படார் என்பது பெரியவர் வாக்கு .நம்பிக்கையோடு தெய்வத்தை நினைத்து விரதம் இருந்தால் அதற்கேற்ற பலன் நிச்சயம் கிடைக்கும். அதற்காகத்தான் விரத நாட்களை நாம் தேர்ந்தெடுத்து வணங்குகின்றோம். வார விரத நாட்கள், மாத விரத நாட்கள், வருட விரத பண்டிகை நாட்கள் என அந்தந்த தெய்வத்தை […]
திருநெல்வேலி மாநகரம் மற்றும் மாவட்டம், தூத்துக்குடி மாவட்டம், தென்காசி மாவட்டம், குமரி மாவட்டம் மற்றும் விருதுநகர் மாவட்டம் ஆகிய இடங்களில் நடைபெறக்கூடிய முக்கிய நிகழ்வுகள், சம்பவங்கள், அரசியல் நிகழ்வுகள் பற்றிய தகவல்கள் சுடச்சுட உங்களுக்காக!
செய்திக்குறிப்புகள்: தமிழக அரசின் கலை விருதுகள் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தூத்துக்குடி மாவட்ட கலைஞர்கள் விண்ணப்பம் செய்யலாம். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பாட்டு, பரதநாட்டியம், கும்மி, கோலாட்டம், மயிலாட்டம், தேவராட்டம், தோல்பாவைக்கூத்து, பொம்மலாட்டம், நையாண்டிமேளம், கரகாட்டம், காவடி, பொய்க்கால் குதிரையாட்டம், மரக்கால் ஆட்டம், கோல்கால் ஆட்டம், கழியல் ஆட்டம், கணியான் கூத்து, ஓவியம் சிற்பம், அரசன் அரசியாட்டம், புலியாட்டம், காளையாட்டம், மானாட்டம், பாம்பாட்டம், குறவன் குறத்தியாட்டம், ஆழியாட்டம், கைச்சிலம்பாட்டம், சிலம்பாட்டம் மற்றும் வில்லிசை ஆகிய கலைகளில் சிறந்து […]
செய்திக்குறிப்புகள்: 190 வது ஆண்டு அய்யா வைகுண்டர் அவதார தினம் விழா. திருச்செந்தூரில் குவிந்த அய்யாவழி பக்தர்கள். தூத்துக்குடி மாவட்டம்., திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதியில் நேற்று 190-வது ஆண்டு அவதார தின விழா நடைபெற்றது. இதனையொட்டி அதிகாலை 5.00மணிக்கு தாலாட்டு பாடுதல், பள்ளி உணர்த்தல், அபயம் பாடுதல் ஆகிய நிகழ்ச்சிகளும் காலை 7.00 மணியளவில் சூரிய உதயத்தில் கடலில் பதமிட்டு, அய்யா வைகுண்டரை அவதாரபதிக்கு அழைத்து வரும் வைபவமும் நடைபெற்றது. பின்னர் மதியம் […]
செய்திக்குறிப்புகள்: தூத்துக்குடி மாவட்டத்துக்கு 3 ஆம்புலன்ஸ் வாகனங்கள். மாவட்ட ஆட்சியர் கொடி அசைத்து துவக்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காயல்பட்டினம் அரசு மருத்துவமனை, நாகலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ஒட்டநத்தம் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றுக்கு 3 புதிய ஆம்புலன்ஸ் வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்களை மக்கள் பயன்பாட்டுக்காக மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செந்தில்ராஜ் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆட்சியர் திரு.செந்தில்ராஜ் அவர்கள், தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை மக்கள் […]
செய்திக்குறிப்புகள்: வாரந்தோறும் திங்கள்கிழமையில் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள். இன்று முதல் துவங்க உள்ளதாக தென்காசி ஆட்சியர் அறிவிப்பு. தென்காசி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டமானது திங்கள்கிழமையான இன்று (07.03.2022) மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஒவ்வொரு திங்கள்கிழமையும் நடைபெற்று வந்த நிலையில் கொரோனா பெருந்தொற்று மற்றும் உள்ளாட்சி தேர்தல் காரணமாக இடையில் சரிவர நடைபெறாத நிலையில் இன்று முதல் ஒவ்வொரு […]
செய்திக்குறிப்புகள்: இலஞ்சி பள்ளியில் வன உயிரின தின விழா. மாணவர்களுக்கு வன உயிரினங்கள் பாதுகாப்பு தலைப்பில் போட்டிகள். தமிழ்நாடு வனத்துறை., திருநெல்வேலி வனக்கோட்டத்தில் உள்ள குற்றாலம் வனச்சரகம் சார்பாக உலக வன உயிரின தின விழா இலஞ்சி ராமசுவாமி பிள்ளை மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் திரு.ஆறுமுகம் தலைமை தாங்கிட உதவித் தலைமை ஆசிரியர்கள் திரு.சொர்ண சிதம்பரம், திருமதி. விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகிக்க, அறிவியல் ஆசிரியர் திரு.சுரேஷ்குமார் வரவேற்புறையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் […]
செய்திக்குறிப்புகள்: தென்காசியில் அதிநவீன கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.கிருஷ்ணராஜ் தொடங்கி வைத்தார். தென்காசி மாவட்டத்தில் குற்ற செயல்கள் மற்றும் போக்குவரத்து விதிமீறல்களை தடுக்கவும் காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தென்காசி நகரில் உள்ள முக்கியப்பகுதியான திருநெல்வேலி - தென்காசி சாலையில் உள்ள போக்குவரத்து சிக்னல் பகுதியில் அதிநவீன கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதனை நேற்று மாவட்ட […]
செய்திக்குறிப்புகள்: ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் வருகை. கன்னியாகுமரி கடலில் உற்சாக குளியல். உலகப்புகழ் பெற்ற சுற்றுலா தலங்களுள் ஒன்றாக விளங்கும் கன்னியாகுமரியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தை முன்னிட்டு கேரளம் மற்றும் தமிழகத்தை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கன்னியாகுமரிக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கமாக உள்ள நிலையில் விடுமுறை நாட்களிலும், பண்டிகை காலங்களிலும் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்படும். இந்நிலையில் நேற்று […]
செய்திக்குறிப்புகள்: மண்டைக்காடு பகவதி கோவில் கொடை விழா 08/03/20022 அன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் வரும் 08/03/2022 அன்று மாசி கொடை விழா நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கு கன்னியாகுமரி மாவட்டத்தின் பல இடங்களில் இருந்தும் பக்தர்கள் அதிகளவில் செல்வார்கள். எனவே மாசி கொடை விழா நடைபெறும் 08/03/2022 அன்று கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாகவும், அதற்கு பதிலாக ஏப்ரல் மாதத்தில் […]
செய்திக்குறிப்புகள்: பூக்களின் விலை கடும் உயர்வு. பிச்சிப்பூ ஒரு கிலோ ரூ.3000க்கு விற்பனை. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை மலர் சந்தை பூக்கள் வாங்க மிகவும் பிரசித்தி பெற்றதாகும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படும் இங்கு பூக்கள் வாங்க தமிழகம் மற்றும் கேரளா மாநிலத்தில் இருந்து அதிகளவு வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் வருவார்கள். தோவாளையில் தினம்தோறும் பூக்களின் வரவை பொறுத்தும், மக்களின் தேவையை பொறுத்தும் விலையில் மாற்றம் […]
விருதுநகர் சந்தையில் ரஷ்யா, உக்ரைன் போர் எதிரொலி காரணமாக பாமாயில் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. நேற்றய நிலவரப்படி விருதுநகர் சந்தையில் கடலை எண்ணெய் 15 லிட்டர் ரூ.2700 ஆகவும், நல்லெண்ணெய் 15 கிலோ ரூ.4208 ஆகவும், பாமாயில் 15 கிலோ ரூ.440 உயர்ந்து ரூ. 2600 ஆகவும், சூரியகாந்தி எண்ணெய் ரூ.2500 ஆகவும் விற்பனையான நிலையில் எண்ணெயின் விலை மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விருதுநகர் சந்தையில் விற்பனையான மற்ற பொருட்களின் விலை நிலவரம்: உளுந்து 100 […]
செய்திக்குறிப்புகள்: சிவகாசி மாநகராட்சியில் நடைபெற்ற மேயர் தேர்தல். திருமதி. சங்கீதா இன்பம் முதல் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சிவகாசி மாநகராட்சியில் நேற்று நடைபெற்ற மேயருக்கான தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து திருமதி. சங்கீதா இன்பம் மனு தாக்கல் செய்தார். அவரின் விருப்ப மனு மாநகராட்சி ஆணையர் திரு.கிருஷ்ணமூர்த்தியிடம் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் மனுத்தாக்கலுக்கான நேரம் முடியும் வரை வேறு யாரும் மேயர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு தாக்கல் செய்யாததால், திருமதி. சங்கீதா இன்பம் போட்டியின்றி மேயராக தேர்வு […]
செய்திக்குறிப்புகள்: சுந்தரவல்லி அம்மன் கோவிலில் தமிழ் கல்வெட்டுக்கள். மிகப் பழமையானது என ஆய்வில் தகவல். விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள பரளச்சி சுந்தரவல்லி அம்மன் கோவிலில் இரண்டு பழமையான தமிழ் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டுகளை மதுரை பாண்டிய நாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் ஆய்வாளர் திரு. முனீஸ்வரன் உதவியுடன் படி எடுத்து ஆய்வுகள் செய்தனர். இதில் இரண்டு கல்வெட்டுக்களும் மிகப் பழமையானவை என கண்டறியப்பட்டுள்ளது. சுந்தரவல்லி அம்மன் கோவில் வளாகத்தின் உட்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டில் […]
திருநெல்வேலி மாநகரம், மாவட்டம் மற்றும் அண்டை மாவட்டங்களில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், சம்பவங்கள், கலை நிகழ்ச்சிகள், மருத்துவ முகாம்கள், அரசியல் நிகழ்வுகள், ஆன்மீக நிகழ்வுகள் போன்ற அனைத்து தகவல்களையும் பற்றி இங்கு நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்து உள்ளதால் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி, களக்காடு தலையணை ஆகியவற்றிலும், தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் நன்றாக கொட்டுகிறது. நேற்றைய நிலவரப்படி பாபநாசம், குண்டாறு அணைப்பகுதியில் 42 மில்லி மீட்டர் மழையும், அடவிநயினார் அணைப்பகுதியில் 23 மில்லி […]
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மேலும் அங்கு மூன்றாம் மற்றும் நான்காம் அணு உலைகள் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், ஐந்து மற்றும் ஆறாவது அணு உலைகள் அமைப்பதற்கு தேவையான காங்கிரீட் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் இங்கு ம் இந்த உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்டு […]
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூடங்குளத்தில் இந்திய - ரஷ்யா கூட்டு ஒப்பந்தத்துடன் 1000 மெகாவாட் உற்பத்தி திறனை கொண்ட 6 அணு உலைகளை அமைப்பது இந்திய அணு சக்தித்துறையின் திட்டம் ஆகும். இதில் முதல் கட்டமாக 1000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. பின்னர் இரண்டாம் கட்டமாக 3 மற்றும் 4 வது அணு உலைகள் கட்டும் பணியும் நடைபெற்று வரும் நிலையில், தற்போது மூன்றாம் […]
திருநெல்வேலி மாநகரில் பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்த மாநகராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ள நிலையில், ஆங்காங்கே பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்துவதும், அதை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து பிளாஸ்டிக் கவர்களை கைப்பற்றி அபராதம் விதிப்பது வாடிக்கையாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிளாஸ்டிக் கவர்களுக்கு மாற்றாக, மாநகரில் உள்ள பலசரக்கு கடைகள் மற்றும் சுவீட் கடைகளில் வாடிக்கையாளர்களுக்குப் பொருட்களைக் கட்டி கொடுக்க பனையோலைகளில் செய்யப்பட்ட பெட்டிகள் பயன்பாட்டிற்கு வரத் தொடங்கியுள்ளன. ஒரு கிலோ, இரண்டு கிலோ, அரை கிலோ மற்றும் […]
திருநெல்வேலி மாநகரில் கொரோனா நோய் தொற்று பரவலாக பரவி வரும் நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மாநகரில் உள்ள திருமண கூடங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியவை தற்காலிக கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன. திருநெல்வேலி மாநகரில் உள்ள இந்த கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் பற்றியும், வழங்கப்படும் உணவு வகைகள் பற்றியும், அங்கு பணிபுரியும் […]
தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று காரணமாக மாநிலம் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தி உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் நடைமுறையில் உள்ள ஊரடங்கை காவல்துறையினர் மற்றும் சுகாதார துறையினர் தீவிரமாகக் கண்காணித்து வருகிறார்கள். ஊரடங்கு காலத்தில் விதிமுறைகளை மீறிச் சாலைகளில் பயணம் செய்பவர்களைக் காவலர்கள் தடுத்து நிறுத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நூதன தண்டனைகளை வழங்கி வருகிறார்கள். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு தினமான நேற்று, திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை நகர் பகுதிகளில் நேற்று காரணமே இல்லாமல் விதிமுறைகளை மீறி, […]