திருநெல்வேலி காந்திமதி அம்மை உடனுறை சுவாமி நெல்லையப்பர் திருக்கோவிலில் தை அமாவாசையை முன்னிட்டு நேற்று பத்ர தீப விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் நேற்று மாலை திருக்கோவிலில் உள்ள மாக்காளை முன்பு மகா நந்தி தீபம்
ஏற்றப்பட்டு, கோவில் வளாகம் முழுவதும் பத்தாயிரம் தீபங்கள் ஏற்றப்பட்டது. பின்னர் இரவு 8.00 மணிக்கு மேல் விநாயகர் - வெள்ளி மூஷிக வாகனத்திலும், ஆறுமுக நயினார் - தங்கச் சப்பரத்திலும், சுவாமி நெல்லையப்பர் - வெள்ளி இடப வாகனத்திலும், காந்திமதி அம்மை - வெள்ளி இடப வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் - சப்பரத்திலும் எழுந்தருளி நான்கு ரத வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.