கன்னியாகுமரி மாவட்டத்தில் கும்பப்பூ பருவம், கன்னிப்பூ பருவம் என இரண்டு போக சாகுபடி வருடம்தோறும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது கும்பப்பூ பருவ அறுவடை பணிகள் தீவிரமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டத்தில் இருந்து வந்துள்ள அறுவடை இயந்திரங்கள் மூலம் புத்தேரி, இறச்சகுளம், கடுக்கரை, புத்தளம், தெரிசனங்கோப்பு, ஈசாந்திமங்கலம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் விளைந்துள்ள நெல் அறுவடை செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கும்பப்பூ பருவத்தில் நெல் விளைச்சல் அமோகமாக உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நெல் அறுவடை மும்முரமாக நடைபெற்று வருவதால் அரசாங்கம் கொள்முதல் நிலையங்களை விரைவில் திறக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்து வருகின்றனர்.