தூத்துக்குடி மாவட்டம்., கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் நேற்று இணைய வழியாக திறனறிதல் போட்டி நடத்தப்பட்டது. குவிஸ் செயலி மூலம் நடைபெற்ற இந்த போட்டியில் 135 கல்லூரிகளை சேர்ந்த இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகள் சுமார் 1000 நபர்கள் பங்குபெற்றனர். இந்த போட்டியில் பங்குபெற்று முதலிடம் பிடித்த மாணவருக்கு 2000 பரிசுத்தொகையும், இரண்டாம் இடம் பிடித்த மாணவருக்கு 1500 பரிசுத்தொகையும், மூன்றாம் இடம் பிடித்த மாணவருக்கு 1000 பரிசுத்தொகையும், இணையவழி பரிவர்த்தனை மூலம் வழங்கப்பட்டது. மேலும் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.