தமிழகத்தில் பருவமழை முடிவுக்கு வந்துள்ள நிலையில், பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் நுங்கு, பதநீர் சீசன் தொடங்கி உள்ளது. இதனால் இந்த மாவட்டங்களில் ஆங்காங்கே பனை மரங்களில் பதநீர் இறக்கும் தொழிலும், பனங்காய்களை பறித்து நுங்கு விற்பனை செய்யும் தொழிலும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக கோவில்பட்டி நகரில் கோவில்பட்டி மெயின் ரோடு, இளையரசனேந்தல் ரோடு, சுபா நகர் பகுதிகளில் சாலை ஓரங்களில் தற்காலிக கடைகளை அமைத்து பதநீர், நுங்கு விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் பலரும் போட்டி போட்டுக் கொண்டு உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கும் பதநீர், நுங்குகளை ஆர்வமுடன் வாங்கி செல்வதை காண முடிகிறது.