- திருநெல்வேலி மாநகர காவல்துறை ஆணையாளராக திரு.சந்தோஷ்குமார் பொறுப்பேற்பு.
- மாநகர சட்டம் - ஒழுங்கு குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை.
திருநெல்வேலி மாநகர காவல்துறை ஆணையாளராக பணியாற்றி வந்த திரு.துரைகுமார் அவர்கள் சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதால், அவருக்கு மாற்றாக சென்னை வடக்கு மண்டல ஐ.ஜி.யாக பணியாற்றி வந்த திரு.சந்தோஷ்குமார் அவர்களை திருநெல்வேலி மாநகர புதிய காவல்துறை ஆணையாளராக தமிழக அரசு நியமனம் செய்து அரசாணை வெளியிட்டது.
இதனை அடுத்து திருநெல்வேலி மாநகர புதிய காவல்துறை ஆணையாளராக திரு.சந்தோஷ்குமார் அவர்கள் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். அவரை திருநெல்வேலி காவல்துறை சரக டி.ஐ.ஜி. திரு.பிரவேஷ்குமார் அவர்கள், மாநகர கிழக்கு மண்டல காவல்துறை துணை ஆணையாளர் திரு. டி.பி.சுரேஷ்குமார் அவர்கள், கூடுதல் துணை ஆணையாளர் திரு.சங்கர் அவர்கள், காவல்துறை உதவி ஆணையாளர் திரு.நாகசங்கர் அவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர்.
மாநகர காவல்துறை ஆணையாளர் அலுவலகத்தில் பதவி ஏற்றுக்கொண்ட திரு.சந்தோஷ்குமார் அவர்கள், திருநெல்வேலி மாநகர சட்டம் - ஒழுங்கு குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
Image source: dailythanthi.com