திருநெல்வேலி மாநகர காவல் நிலையங்களுக்கு தமிழக அரசால் புதிதாக 8 நான்கு சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய வாகனங்களை நேற்று திருநெல்வேலி மாநகர காவல் அலுவலக வளாகத்தில் வைத்து, மாநகர காவல்துறை ஆணையாளர் திரு.துரைக்குமார் அவர்கள் முதன்முதலாக இயக்கி வைத்தார். பின்னர் இந்த 8 வாகனங்களும், திருநெல்வேலி மாநகரில் உள்ள 8 சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்களுக்கு ரோந்து பணிகளுக்காக வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்ட காவல்துறை உயரதிகாரிகள் உள்ளிட்ட பல காவலர்கள் கலந்து கொண்டனர்.