தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளதாக தமிழக அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வளர்ந்து வரும் நகரங்களுள் ஒன்றாக விளங்கும் சங்கரன்கோவில் நகராட்சியில் இட நெருக்கடி மற்றும் போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்கும் பொருட்டு சங்கரன்கோவில் - திருவேங்கடம் சாலையில் பல ஆண்டுகளுக்கு முன்னர் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. எனினும் அந்த பேருந்து நிலையம் முழுமையாக செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படாத காரணத்தால் பராமரிப்பின்றி பாழடைந்து போய்விட்டது. தற்போது அந்த பேருந்து நிலையம் புனரமைக்கப்பட்டு விரைவில் புதிய பேருந்து நிலையமாக மாற்றப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதனால் சங்கரன்கோவில் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.