- திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் பங்குனி திருவிழா துவக்கம்.
- நாளை முதல் 8 நாட்களுக்கு உடையவர் லிங்க தரிசனம்.
திருநெல்வேலி மாநகரின் மத்தியில் அமையப்பெற்றுள்ளது புகழ்பெற்ற காந்திமதி அம்மை உடனுறை சுவாமி நெல்லையப்பர் திருக்கோவில். வருடம்தோறும் அனைத்து தமிழ் மாதங்களிலும் திருவிழாக்கள் நடைபெறும் சிறப்பு பெற்ற இந்த கோவிலின் பங்குனி உத்திர திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
பத்து நாட்களுக்கு விமரிசையாக நடைபெறும் இந்த விழாவின் சிகர நிகழ்ச்சியான வரும் 18/03/2022 தேதி பங்குனி உத்திரம் அன்று திருக்கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் வைத்து செங்கோல் வழங்கும் விழா நடைபெற இருக்கிறது.
பங்குனி திருவிழா முக்கிய நிகழ்ச்சிகள்:
09/03/2022 - முதலாம் திருநாள்:
காலை 6.00 மணிக்கு மேல் 7.00 மணிக்குள்: சுவாமி சன்னதி உள் கொடிமரத்தில் பங்குனி திருவிழா கொடியேற்றம்.
12/03/2022 - நான்காம் திருநாள்:
காலை 11.00 மணிக்கு மேல்: வேணுவனலிங்கோற்பத்தி திருவிளையாடல்.
இரவு: சுவாமி நெல்லையப்பர் - காந்திமதி அம்மை வெள்ளி இடப வாகன காட்சி.
15/03/2022 - ஏழாம் திருநாள்:
இரவு: நடராஜர் சிவப்பு சாத்தி மற்றும் வெள்ளை சாத்தி தரிசனம்.
16/03/2022 - எட்டாம் திருநாள்:
காலை: நடராஜர் பச்சை சாத்தி தரிசனம்.
17/03/2022 - ஒன்பதாம் திருநாள்:
காலை: சந்திரசேகரர் - பவானி அம்மை சட்டத்தேரில் எழுந்தருள தேரோட்டம்.
18/03/2022 - பத்தாம் திருநாள்:
மாலை 6.00 மணிக்கு மேல் 7.00 மணிக்குள்: பங்குனி உத்திர செங்கோல் வழங்கும் விழா.
10/03/2022 தேதி முதல் 17/03/2022 தேதி வரை: மாலை 5.30 மணிக்கு மேல் உடையவர் லிங்க தரிசனம்.
Image source: Facebook.com