- நெல்லையப்பர் கோவில் யானைக்கு அமைக்கப்பட்டுள்ள நீராடும் குளம்.
- கோடை வெயிலுக்கு இதமாக யானை உற்சாக குளியல்.
திருநெல்வேலி மாநகரில் அமையப்பெற்றுள்ளது பிரசித்தி பெற்ற காந்திமதி அம்மை உடனுறை சுவாமி நெல்லையப்பர் திருக்கோவில். இங்கு ‘காந்திமதி’ என்ற பெண் யானை வளர்க்கப்பட்டு வருகிறது.
இந்த யானை தண்ணீரில் மூழ்கி குளிப்பதற்கு வசதியாக சமீபத்தில் திருக்கோவில் வளாகத்தில் உள்ள வசந்த மண்டபத்தில் 26 அடி நீளம், 22 அடி அகலம் மற்றும் 11½ லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீராடும் குளம் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது. இந்த குளத்திற்குள் யானை இறங்கி குளித்துவிட்டு வெளியே வருவதற்கு வசதியாக சாய்வு தளமும் அமைக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது கொளுத்தி வரும் கோடை வெயிலுக்கு இதமாக யானை காந்திமதி நீராடும் குளத்திற்குள் இறங்கி உற்சாக குளியல் போடுவது காண்பார் மனதை கவர்ந்து வருகிறது.
Image source: dailythanthi.com