செய்திக் குறிப்புகள்
- நெல்லை பள்ளிகளில் போதை தடுப்பு குழு அமைக்கப்படும் என்று கலெக்டர் விஷ்ணு தகவல்
- காணொலி காட்சி மூலம் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது
நெல்லை பள்ளிகளில் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கினார். அப்போது கலெக்டர் விஷ்ணு பேசுகையில்.. நாடு முழுவதும் போதைப் பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் முதலமைச்சர் மு. க ஸ்டாலின் உத்தரவுப்படி பல்வேறு குழுக்கள் பல பகுதிகளில் அமைக்கப்பட்டு போதைப்பொருட்கள் கடத்தல் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மேலும் போதை தடுப்பு குழு என்ற அமைப்பு நாட்டு நலப்பணித்திட்டம் தேசிய மாணவர் படை போன்ற இந்தக் குழுவும் உருவாக்கப்பட்டு கண்காணிக்கப்படும். மேலும் 14 44 610 98 என்ற போதை தடுப்பு விழிப்புணர்வு எண்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று கலெக்டர் விஷ்ணு தெரிவித்தார்.
மேலும் பள்ளி கல்லூரிகளில் உள்ள கடைகளில் போதை பொருட்கள் விற்பனை தெரியவந்தால் குண்டர் தடுப்பு சட்டத்தில் உடனே நடவடிக்கை எடுக்கப்படும் .
இந்த காணொளி மூலம் மாவட்டத்தில் 318 பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்துகொண்ட பள்ளி கல்லூரி, மாணவ மாணவிகள் போதைபொருள் புறக்கணிப்பு உறுதிமொழி ஏற்றனர்.
கூட்டத்தில் நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் சரவணகுமார், சீனிவாசன், ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்ட அலுவலர் சந்திரகுமார், கல்லூரி உளவியல் துறை தலைவர் ஸ்ரீநிதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் பிரிவு ஷேக் மனோன்மணியம், பல்கலைக்கழக உளவியல் துறை பேராசிரியர் யுவராஜ், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் அருட்செல்வி, சுந்தரனார, தேசிய தகவல் மைய மேலாளர் ஆறுமுகநயினார், தேவராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இளம் சமுதாயம், வளர்ந்து வரும் சமுதாயம் போதை பொருளுக்கு அடிமையுறாது, வாழ்வு வீணாகாது தடுப்பதற்கு இப்படிப்பட்ட விழிப்புணர்வு கூட்டம் மிகவும் அவசியம் என்பதையும் இந்த பதிவில் திருநெல்வேலி டுடே அறிவுறுத்துகின்றது
Image source: Dailythanthi