செய்திக்குறிப்புகள்:
- நெல்லையில் ஒரு நிமிடம் 33 வினாடிகளில் வேதியியல் அட்டவணையில் 118 தனிமங்களையும் கூறி ஆறு வயது சிறுவன் சாதனை புரிந்துள்ளார்.
- ஆசிய புக் ஆப் ரெக்கார்டில் இடம் பெற்ற சிறுவனுக்கு நெல்லை மாவட்ட ஆட்சியாளர் விஷ்ணு பாராட்டு தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் ஒரு நிமிடம் 33 வினாடிகளில் வேதியியல் அட்டவணையில் 118 தனிமங்களையும் கூறி ஆறு வயது சிறுவன் சாதனை புரிந்துள்ளார். ஆசிய புக் ஆப் ரெக்கார்டில் இடம் பெற்ற சிறுவனுக்கு நெல்லை மாவட்ட ஆட்சியாளர் விஷ்ணு பாராட்டு தெரிவித்துள்ளார் .
நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் உதவி பேராசிரியராகவும் புற்றுநோய் சிகிச்சை சிறப்பு நிபுணராகவும் பிரபுராஜ் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவ ஆர்த்தி ஹரிப்பிரியா பல் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார் . இவர்களுடைய மகன் சதுர்கிரிஷ் ஆத்விக் (வயது 6) சிறுவயதிலேயே திருக்குறளை மனப்பாடமாக படித்து சாதனை புரிந்துள்ளார்.
3 வயதில் 30 நிமிடத்தில் 53 திருக்குறளையும், 41/2 வயதில் 5 நிமிடம் 40 வினாடிகளில் 100 திருக்குறள்களையும் கூறி சாதனை படைத்துள்ளார் .
நமது நாட்டில் உள்ள பல மாநிலங்கள் அதன் தலைநகரங்கள் மற்றும் உலக நாடுகள் அதன் தலைநகரங்கள் என அனைத்தையும் குறுகிய நேரத்தில் கூறி சாதனை படைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்,குளோபல் ரெக்கார்ட்ஸ், சர்ச் ரிசர்ச் பவுண்டேஷன் அனைத்தும் சதுர்கிரிஷ் ஆத்விக் சிறுவனுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார் தெரிவித்து கேடயம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி உள்ளது.
தற்பொழுது ஒரு நிமிடம் 33 வினாடிகளில் வேதியியல் தனிம அட்டவணையில் உள்ள 118 தனிமங்களையும் கூறி ஆசிய புக் ஆஃப் ரெக்கார்டில் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
நெல்லை மாவட்ட ஆட்சியாளர் விஷ்ணு அவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார்.
சதுர்கிரிஷ் ஆத்விக் பள்ளிப் பாடங்கள் விரைந்து கற்றுக் கொண்டதால் திருக்குறளை கற்றுக் கொடுக்க ஆர்வம் எங்களுக்கு ஏற்பட்டது. தாய் மொழியான தமிழ் மீதுள்ள பற்றின் காரணமாக திருக்குறளை கற்றுக் கொடுத்து வருகின்றோம். விரைவாக 1330 திருக்குறளையும் குறைந்த நேரத்தில் ஒப்புவிக்கும் நிகழ்ச்சியை நடத்த இருக்கின்றோம் என்று மகிழ்ச்சியோடு சதுர்கிரிஷ் ஆத்விக் பெற்றோர் தெரிவித்தனர்.
Image source: dailydhanthi.com